pep.zone
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


a.hotworld.pep.zone

தீராத சிக்கல், மலச்சிக்கல் தீர:-

உலகில் உள்ள அனைவரும், தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மலச்சிக்கல் வராமல் இருந்திருக்க மாட்டார்கள். மலச் சிக்கலுடனேயே பலர் வாழ்கின்றனர்.

மலச்சிக்கல் மலம் கழிப்பதில் ஏற்படும் கோளாறு. ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழித்தல் 'நார்மல்'. மலச்சிக்கல் ஏற்பட்டால் ஒன்று வெளியேறும் மலத்தின் அளவு குறையும். இரண்டாவது பல நாட்களுக்கு மலமே வெளியேறாது. அதுவும் மலம் கழிக்க சிரமப்பட வேண்டியிருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்போதும் வயிறு (மலக்குடல்) நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும். உடலில் பல நாள் கழிவுப் பொருட்கள் தேங்கியிருப்பது ஒரு வித சங்கடத்தை உண்டாக்கும். நாள்பட்ட மலச்சிக்கல் பல கோளாறுகளை உண்டாக்கும்.

மலச்சிக்கல், வயிற்று வலியை உண்டாக்கலாம். மலம் கெட்டிப்பட்டு போவதால் அது வெளியேற கஷ்டமாக இருக்கும். இதனால் வயிற்று வலி உண்டாகும். வாந்தியை உண்டாக்கலாம். பசி இருக்காது. ஜீரண மண்டலத்தில் கடைசி அங்கங்களான மலக்குடல், பெருங்குடலின் மலம் கெட்டிப்பட்டு இறுகி விடும். மலப்பாதையை அடைத்து கொண்டு விடுவதால், மேலும் வரும் மலம் வெளியேற முடியாமல் நின்று விடும். இதனால் தசை இழுப்பு, சுளுக்கு, வலி ஏற்படலாம்.

மலச்சிக்கல் ஒர் உயிர்க்கொல்லி நோயல்ல. அதனால் எப்போதாகிலும் மலம் கழியாது போகுமானாலும், அளவில் குறைந்து கழியுமானாலும் அதற்காகத் பயப்பட வேண்டிய தேவையில்லை. மேலும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மலம் கழியாது இருந்த பின்னர் கழிக்கின்ற போது மலம் அளவில் மிகுந்து இருக்குமெனவும் எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் உணவின் சக்கை, மலக் குடலிலே ஒரிரு நாட்கள் இருக்க நேரிடும் போது, அதிலுள்ள நீர்ச் சத்து முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு விடுவதால், மலம் கெட்டிப்பட்டுப் போவதுடன் அளவிலும் குறைந்து விடுகிறது. எனவே இந்த விஷயம் உங்கள் மன அமைதியைப் பாதிக்க வேண்டிய அவசியமில்லை. கழிவு எதுவும் வெளியே வராமல் உள்ளேயே தங்கி இருக்கப் போவதுமில்லை. சேர்ந்தாற் போல் சில நாட்கள் கழிவறைக்குச் செல்லாமல் இருந்தால் கூடக் கவலையுறத் தேவையில்லை. ஆனால் எப்போதும் மலம் கழிப்பதில் சிக்கல் உள்ளவர்களுக்குத்தான் இது பொருந்தும். நாள்தோறும் நேரந்தவறாமல் கழிவறைக்குச் சென்று வருகின்ற ஒருவருக்கு ...
Next part ►


This page:




Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.